புதுச்சேரி

டீக்கடைக்காரரிடம் பால் ஏடு கேட்கும் காகம்.. வைரல் விடியோ

புதுச்சேரி டீக்கடைக்காரரிடம்  தினமும் பால் ஏடு கேட்டு அதனை பெற்று செல்லும் காகத்தின் விடியோ வைரலாகியிருக்கிறது.

DIN

புதுச்சேரி டீக்கடைக்காரரிடம்  தினமும் பால் ஏடு கேட்டு அதனை பெற்று செல்லும் காகத்தின் விடியோ வைரலாகியிருக்கிறது.

புதுச்சேரி லாசுப்பேட்டை உழவர் சந்தை அருகே டீக்கடை நடத்தி வருபவர் ரவிச்சந்திரன். இவரது கடைக்கு காலையில் தினமும் வரும் காகம் பிஸ்கட், சமோசா போன்றவற்றை வைத்தால் சாப்பிடுவதில்லை.

அவர் கொடுக்கும் பால் ஏட்டை  மட்டும் சாப்பிட்டு  செல்கிறது. இதற்காக தினமும் காலையில் டீக்கடைக்கு வரும் காகம், ரவிச்சந்திரனைப் பார்த்து கரைந்து அழைக்கிறது.

இதனையடுத்து பாலில் இருந்து ஏட்டை வடிகட்டி ஒரு கப்பில் அவர் வைக்க அதனை காக்கை எடுத்து  சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்து சாப்பிடுகிறது. இந்தக் காட்சி தினமும் லாஸ்பேட்டை உழவர்சந்தை எதிரே நிகழ்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT