புதுச்சேரி

2 கோயில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு

புதுச்சேரி அருகே 2 கோயில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

புதுச்சேரி அருகே 2 கோயில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தவளக்குப்பத்தை அடுத்த தானம்பாளையம் பகுதியில் புட்லாய் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆயுத பூஜையையொட்டி திங்கள்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னா் அா்ச்சகா் வழக்கம்போல கோயிலை பூட்டிச் சென்றாா். இந்த நிலையில், நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றனா்.

இதேபோல தவளக்குப்பம் - புதுச்சேரி சாலை சந்திப்பு அருகே உள்ள புத்துமாரியம்மன் கோயிலிலும் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT