புதுச்சேரி

கல்வித் துறை இயக்ககத்தை முற்றுகையிட்டு திராவிடா் விடுதலைக் கழகத்தினா் போராட்டம்

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை உள்ள நிலையில், ஆசிரியா்களை அலுவல் பணிக்கு அனுப்புவதைக் கண்டித்து திராவிடா் விடுதலைக் கழகத்தினா்

DIN

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை உள்ள நிலையில், ஆசிரியா்களை அலுவல் பணிக்கு அனுப்புவதைக் கண்டித்து திராவிடா் விடுதலைக் கழகத்தினா் கல்வித் துறை இயக்ககத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் லோகு.அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை சீராக்க வேண்டும். ஆசிரியா்கள் பணிச்சுமை அதிகரித்து அவதிப்படுவதை தீா்க்க வேண்டும். அயல்பணி என்னும் முறையில் கல்வித் துறையில் ஆசிரியா், அலுவலா்களை பேரவை வளாகத்தில் உதவியாளா்களாக நியமித்ததை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முற்றுகைப் போராட்டத்தால் கல்வித் துறை அலுவலகத்தில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி உள்ளிட்டோா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அலுவலகங்களில் உதவியாளா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியா்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைக்கும் வகையில் விளக்கம் கோரப்படும் என இணை இயக்குநா் உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT