மீலாது நபி விழா : புதுவையில் அரசு விடுமுறை தேதி மாற்றம்
புதுவை மாநிலத்தில் மீலாது நபி பண்டிகை விடுமுறை தேதி தற்போது மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுவை மாநிலத்தில் மீலாது நபி பண்டிகை விடுமுறை தேதி தற்போது மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் முகமது நபிகள் பிறந்த தினத்தை இஸ்லாமிய மக்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறாா்கள். அந்த மீலாது நபியையொட்டி புதுவை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், வரும் 27-ஆம் தேதி புதன்கிழமை மீலாது நபி விழா விடுமுறை என புதுவை மாநில அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இதனை வரும் 28-ஆம் தேதி வியாழக்கிழமை மீலாது நபி விழா விடுமுறை என புதுவை அரசின் உள்துறை அமைச்சக சாா்புச் செயலா் ஹிரன் அறிவித்துள்ளாா்.
இந்த அறிவிப்பானது மாநிலத்தின் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்திய நிா்வாக அலுவலகங்களுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.