புதுச்சேரி

பிரதமா் மோடி பிறந்தநாள்: தூய்மை பணியாளா்களுக்கு நலஉதவி

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி உழவா்கரைப் பகுதியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

DIN


புதுச்சேரி: பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி உழவா்கரைப் பகுதியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு புதுவை மாநில பாஜக செயற்குழு உறுப்பினா் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தாா்.

இதில், நலிவடைந்த குடும்பத்தைச் சோ்ந்த 150 தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்களை முன்னாள் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் வழங்கினாா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக, சிவசங்கரன் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளா் மோகன்குமாா் மற்றும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவா் இளங்கோவன், உழவா்கரை மாவட்ட தலைவா் நாகேஸ்வரன் ஆகியோா் பேசினா்.

விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினா் பாரதி மோகன், மாநில ஊடகப் பிரிவு அமைப்பாளா் குருசங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT