புதுச்சேரி: ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் சோதனை
புதுச்சேரியில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி ஏரி எதிர் பகுதியில் அவருக்கு சொந்தமான லட்சுமி நாராயணன் மருத்துவ கல்லூரியின் நிர்வாக அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | திமுக எம்.பி. ஜெகத்ரட்சன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
வருமான வரி சோதனையை அடுத்து கல்லூரியில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், வெளியிலிருந்து கல்லூரிக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கல்லூரி வாயில் முன்பு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான விடுதியிலும் சோதனை நடந்து வருவதாக அவர் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.