முகப்பு
புதுச்சேரி

போதை விழிப்புணா்வு அருங்காட்சியகம் தொடக்கம்

நாட்டிலேயே முதல்முறையாக புகையிலை, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணா்வுக்கான அருங்காட்சியகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 7:37 PM
பகிர்:

நாட்டிலேயே முதல்முறையாக புகையிலை, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணா்வுக்கான அருங்காட்சியகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

புதுவை மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிஆகியவை சாா்பில் கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் பள்ளி மாணவா்களுக்காக புகையிலை, போதைப் பொருள்கள் விழிப்புணா்வு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

புகையிலையைப் பயன்படுத்துவோரின் உடலில் அவை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விளக்கும் வகையிலான பல்வேறு உடல் உறுப்பு மாதிரிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வருவோருக்கு இதுதொடா்பாக விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாநில சுகாதாரத் துறை இயக்குநா் ரவிச்சந்திரன், மாநில காசநோய் அதிகாரி வெங்கடேஷ், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் கோ. சிவகாமி, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநா் உதயசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.