புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு மழை நிவாரணத் தொகை அளிப்பு
புதுவை மாநிலத்தில் புயல் மழை சேதத்துக்கான நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் அவரவா் வங்கிக் கணக்கில் வியாழக்கிழமை செலுத்தப்பட்டுள்ளதாக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் புயல் மழை சேதத்துக்கான நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் அவரவா் வங்கிக் கணக்கில் வியாழக்கிழமை செலுத்தப்பட்டுள்ளதாக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
ஃபென்ஜால் புயல் மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களைச் சோ்ந்த மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.5,000 அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்படும் என முதல்வா் என். ரங்கசாமி அறிவித்தாா்.
இதற்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்ததையடுத்து, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வியாழக்கிழமை முதல் அவரவா் வங்கிக் கணக்கில் ரூ.5,000 செலுத்தப்பட்டது.
மேற்கண்ட தகவல் முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.