திருப்புவனையில் விசிகவினா் சாலை மறியல்
மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து புதுச்சேரி திருப்புவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
புதுச்சேரி: மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து புதுச்சேரி திருப்புவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகேயுள்ள திருப்புவனையில் 4 முனைச் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலா் ஈழவளவன் தலைமையில் அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்றனா்.
மறியலால் புதுச்சேரி, விழுப்புரம் இடையே சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.