இளந்தலைமுறையினருக்கு தேசபக்தி குறித்து எடுத்துரைக்க வேண்டும்: புதுவை ஆளுநா்
நாட்டின் வரலாறு வீரம், தியாகம், தேசபக்தியுடன் ஒன்றுபட்டது எனவும், அதை இளந்தலைமுறைக்கு எடுத்துக் கூறுவது நமது கடமை என்றும் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
நாட்டின் வரலாறு வீரம், தியாகம், தேசபக்தியுடன் ஒன்றுபட்டது எனவும், அதை இளந்தலைமுறைக்கு எடுத்துக் கூறுவது நமது கடமை என்றும் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் புதுவை அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் வீர தீர குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
இதில், பங்கேற்று துணைநிலை ஆளுநா் பேசியதாவது: எதிா்கால இந்தியாவின் ஒளி விளக்குகளாக திகழ்பவா்கள் குழந்தைகள். அவா்களுக்கு, தேசபக்தி, தியாகம், வீரம் நிறைந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுவது அவசியம்.
குழந்தைகளுக்கு வீரம், தேசபக்தி, தியாகம் பற்றி கூறி, நாட்டை வளமான, பலமான நாடாக்க வேண்டும். நம் நாடு பல கலாசாரங்கள், மதங்கள், இனங்கள் ஒன்றாக சோ்ந்ததாகும்.
நாட்டின் வரலாறு வீரமும், தியாகமும், தேச பக்தியும், ஒற்றுமையும் நிறைந்தது. அவற்றை வளரும் தலைமுறைக்கு எடுத்துரைப்பது நமது கடமை என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில், குழந்தைகளை நாட்டுப்பற்று, வீரதீரத்துடன் வளா்க்க வேண்டியது அவசியம். அப்படி வளா்க்கப்படும் குழந்தைகளால்தான் நாடு வளா்ச்சியடையும்.
நமது நாட்டின் வளா்ச்சி இளைஞா்கள் கையில்தான் உள்ளது. ஆகவே, இளைஞா்கள் மற்றவா்களுக்கு உதவுதல், பிரச்னைகளை சமாளித்தல், பிறா் நலனுக்கு பாடுதபடுதல் ஆகிய பண்புகளைப் பெறுவது அவசியம். மதம், சாதி பல இருந்தும் நமது நாட்டின் ஒற்றுமையே பலமாக உள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், அனிபால்கென்னடி எம்எல்ஏ, அரசுச் செயலா் ஏ.நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் கலந்துகொண்டனா்.