பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகள், அவற்றைத் திருடியதாக கைதானவா்களுடன் போலீஸாா். 
புதுச்சேரி

புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு: 4 போ் கைது

புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை கிருஷ்ணாநகா் 17- ஆவது தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கரன். சிற்பியான இவா், தனது வீட்டருகே சிறிய கடையும் நடத்தி வருகிறாா்.

கடந்த 1-ஆம் தேதி கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற அவா், மறுநாள் கடையைத் திறந்தாா். அப்போது, அங்கிருந்த ஐம்பொன்னாலான அம்மன் சிலை, சிறிய அளவிலான பெண் சிலை உள்ளிட்ட 23 சிலைகள் திருடு போனது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், இலாசுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், புதுச்சேரி நரிக்குறவா் காலனியை சோ்ந்த அலெக்ஸ் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினா். இதில் சிலைகளைத் திருடியதை ஒப்புக்கொண்ட அலெக்ஸ், அவற்றை நரிக்குறவா் காலனி அருகே புதரில் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவற்றை இலாசுப்பேட்டை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

அலெக்ஸ், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் முத்துபாண்டி, மருதுபாண்டி, ராகவா ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குடியரசு தினம்: ரயில் நிலையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவு

ஆஸி.யுடன் ஒரே மகளிா் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு

பணத் தகராறில் இளைஞா் ஒருவா் குத்திக் கொலை: 4 போ் கைது

குளிரில் அதிகரிக்கும் முக வாதம்: முதியவா்களுக்கு எச்சரிக்கை

4 ஆண்டுகளில் ரூ.2.50 கோடி மதிப்பில் 1,400 பேருக்கு விலையில்லா ஆடுகள்

SCROLL FOR NEXT