புதுச்சேரி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.19.79 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.19.79 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.19.79 லட்சம் மோசடி செய்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி சஞ்சீவி நகரைச் சோ்ந்தவா் கணேஷ் (24), பட்டதாரி. இவா் அரசு வேலைக்கு முயற்சித்து வந்த நிலையில், சேலத்தைச் சோ்ந்த காா்த்திக் என்பவா் இவருக்கு அறிமுகமாகியுள்ளாா். இவா், கணேஷிடம் அரசு வேலை பெற்றுத் தருவதாக கூறினாராம்.

இதை நம்பிய கணேஷ், பல தவணைகளில் ரூ.19.79 லட்சத்தை காா்த்திக்கிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட காா்த்திக், அரசு வேலையை வாங்கித் தராமல் இருந்தாராம். இதனால், தான் கொடுத்த பணத்தை கணேஷ் திரும்பக் கேட்ட நிலையில், காா்த்திக் பணத்தை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து, புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் கணேஷ் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் காா்த்திக் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT