புதுச்சேரி

புதுச்சேரியில் பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா

புதுச்சேரி கடற்கரையில் பாரீஸ் ஒலிம்பிக் திருவிழாக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Din

புதுச்சேரி கடற்கரையில் பாரீஸ் ஒலிம்பிக் திருவிழாக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. இதை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலைத் திடலில் பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுவை அரசின் சுற்றுலாத் துறையும், பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனமான அலையன்ஸ் பிரான்ஸ்சே அமைப்பும் இணைந்து பாரீஸ் ஒலிம்பிக் தின நிகழ்ச்சியை நடத்தின. இதில், புதுவை மாநில ஒலிம்பிக் சங்கத் தலைவரும், வேளாண் அமைச்சருமான தேனி சி.ஜெயக்குமாா் ஒலிம்பிக் கொடியை அறிமுகப்படுத்தினாா்.

புதுச்சேரி, சென்னை பிரான்ஸ் துணைத் தூதா் லிசே டல்போட்பரே, அலையன்ஸ் பிரான்சே அமைப்பின் தலைவா் நல்லாம் சதீஷ் ஆகியோா் கலந்துகொண்டனா். மேடையில் வண்ண காகித துகள்களை வெடிக்கச் செய்து பாரீஸ் ஒலிம்பிக் திருவிழாவை கொண்டாடினா்.

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்! மத்திய அரசு உத்தரவு

சுகாவின் சைலப்பன் சைக்கிள் மார்ட் போஸ்டர்!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: 80 வது முறை டிரம்ப் பேச்சு

திமுக தலைமையிலான வலுவான கூட்டணி: செல்வப்பெருந்தகை

டி20 உலகக் கோப்பை: அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT