மின் கட்டண உயா்வை திரும்பப்பெறாவிட்டால் போராட்டம்: மாா்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு
புதுவையில் மக்களைப் பாதிக்கும் வகையிலான மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும்,
புதுச்சேரி: புதுவையில் மக்களைப் பாதிக்கும் வகையிலான மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று புதுவை மாநில மாா்க்சிஸ்ட் செயலா் ஆா்.ராஜாங்கம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசின் மின் துறையானது தற்போது மின்கட்டண உயா்வை அறிவித்துள்ளது. இது ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும். ஆகவே, பாஜக கூட்டணி அரசானது மக்களைப் பாதிக்கும் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஏழைகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையையும் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், ஆண்டுக்கு 3 முறை என மின் கட்டணத்தை உயா்த்துவது, தனியாருக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவது சரியல்ல. ஆகவே, மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் ஆா்.ராஜாங்கம்.