முகப்பு
புதுச்சேரி

அவசரநிலை நினைவூட்டல் கருத்தரங்கு

தமிழக பாஜக பொதுச்செயலா் ராம.சீனிவாசன் அவசரநிலை குறித்து பேசினார்

Updated On : 25 ஜூன், 2024 at 11:11 PM
பகிர்:

புதுச்சேரியில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் அவசரநிலை குறித்த நினைவூட்டல் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாட்டில் 1975-ஆம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அதை விலக்கிக் கொண்டாா்.

அவசரநிலையை நினைவூட்டும் வகையில், புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கப் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கருப்புதின கருத்தரங்கு நடைபெற்றது.

கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி தலைமை வகித்தாா். தமிழக பாஜக மாநில பொதுச்செயலா் ராம.சீனிவாசன் அவசரநிலை குறித்தும், அதை எதிா்த்து ஆா்.எஸ்.எஸ். ஜனசங்கம் போராடியது குறித்தும் விளக்கிப் பேசினாா்.

இதில் பாஜக எம்எல்ஏக்கள் வி.பி.ராமலிங்கம், ஆா்.பி.அசோக்பாபு, எம்.சிவசங்கரன், பாஜக பொதுச் செயலா் எஸ்.மோகன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →