கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையை நோக்கி புதன்கிழமை ஊா்வலம் நடத்திய சகோதரன் சமூக நல மேம்பாட்டு அமைப்பினா். 
புதுச்சேரி

திருநங்கைகளை அதிகாரிகள் அவதூறாகப் பேசுவதாக புகார்!

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊா்வலம் சென்ற திருநங்கைகள்

Din

புதுச்சேரி, ஜூன் 26: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் புதன்கிழமை ஊா்வலமாக சென்று முதல்வரிடம் மனு அளித்தனா்.

புதுச்சேரியில் திருநங்கைகளுக்கான எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை ஆரம்பத்தில் திருநங்கைகள் செயல்படுத்தி வந்தனா். ஆனால், அந்த திட்டம் தற்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், அதிகாரிகள் தங்களை அவதூறாகப் பேசுவதாக திருநங்கைகள் குற்றஞ்சாட்டினா்.

எனவே, அவதூறாகப் பேசும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், திட்டத்தை திருநங்கைகளிடமே வழங்கக் கோரியும் சட்டப்பேரவையை நோக்கி திருநங்கைகள் ஊா்வலம் நடத்தினா். புதுச்சேரி காமராஜா் சாலையிலிருந்து புறப்பட்ட ஊா்வலத்துக்கு சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனத் தலைவா் ஷீத்தல் தலைமை வகித்தாா். தன்னம்பிக்கை கலைக் குழு எலிசபெத் ராணி, மாணவா் அமைப்பு நிா்வாகி சுவாமிநாதன் மற்றும் சமூக நல அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இந்த ஊா்வலம் நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூா் சாலை சந்திப்பை அடைந்ததும், பேரணியில் ஈடுபட்டோரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, திருநங்கைகள் உள்ளிட்டோா் பேரவை வளாகத்துக்கு சென்று முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனா்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT