முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி சாலையோர ஆக்கிரமிப்புகள்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

Updated On : 20 மே, 2024 at 10:49 PM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் சாலை ஓரங்களில் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளோா் அவற்றை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் கந்தசாமி திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

புதுச்சேரி நகராட்சியில் மகாத்மா காந்தி சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.

இதனால் வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, நகராட்சி ஆணையா் கந்தசாமி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

மகாத்மா காந்தி வீதி தனியாா் மருந்துக் கடை முதல் அதிதி விடுதி சந்திப்பு வரையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி கடை உரிமையாளா்களிடம் எச்சரிக்கை செய்தனா்.

குழுவின் ஆய்வின் போது, சாலையோரத்தில் எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டதை அறிந்த அதிகாரிகள் பாதுகாப்பு கருதி 2 உருளைகளை பறிமுதல் செய்தனா். விதி மீறலைக் காரணம் காட்டி சில கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. சாலையை ஆக்கிரமித்துள்ள பழம், இளநீா், துரித உணவகங்களுக்கு எச்சரிக்கை செய்தனா்.

மீண்டும் வியாழக்கிழமை பாா்வையிட வருவதாகவும் அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் தலைமையிலான குழு எச்சரித்துள்ளது.