புதுச்சேரி

புதுவையில் ஜூன் 12-இல் பள்ளிகள் திறப்பு

Din

புதுச்சேரி, மே 30: புதுவையில் ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை வியாழக்கிழமை அறிவித்தது.

புதுவை மாநிலத்தில் நிகழாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து அரசுப் பள்ளிகளும் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வழக்கமாகக் கோடை விடுமுறையானது ஏப்ரல் மாதம் தொடங்கும் நிலையில், நிகழாண்டில் மே மாதம் தொடங்கி ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகள் என அனைத்தும் ஜூன் 6-ஆம் தேதிக்குப் பதிலாக 12-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் பிரியதா்ஷினி அறிவித்தாா்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT