புதுச்சேரியில் விமான சேவை 
புதுச்சேரி

புதுச்சேரியில் டிச.20 முதல் மீண்டும் விமான சேவை!

டிசம்பர் 20 முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும்

DIN

புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, ஜதாராபாத்திற்கு டிசம்பர் 20 முதல் மீண்டும் விமான சேவை தொடக்குகிறது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் கடந்த 2013 ஜனவரியில் திறக்கப்பட்டது. விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காகக் கடந்தாண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்து கடந்தாண்டு அக்டோபர் முதல் மீண்டும் விமான நிலையம் செயல்படத் தொடங்கியது.

புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, ஐதராபாத்திற்கு விமானங்களை இயக்குவதை கடந்த மார்ச்சுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுத்தியது. இதனால் கடந்த ஏழு மாதங்களாக விமானங்கள் ஏதும் புதுச்சேரியிலிருந்துஇயக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரியிலிருந்து மீண்டும் விமானச் சேவை துவங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இன்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதையடுத்து டிசம்பர் 20 முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்களில் புகார் அளியுங்கள்!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

SCROLL FOR NEXT