முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் நாளை மக்கள் குறைதீா் கூட்டம்

புதுச்சேரியில் நவ.15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:26 PM
பகிர்:

புதுச்சேரியில் நவ.15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் உத்தரவின்படி, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி, புதுச்சேரி மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கு அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் தலைமையில், நவம்பா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் நவ.15-ஆம் தேதி நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புதுச்சேரி, பேட்டையன்சத்திரம் வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.