ஐ.நா. நீா் தர குழுவின் உறுப்பினராக புதுவை பேராசிரியா் நியமனம்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக நீா் தர கூட்டணியின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், பேராசிரியருமான நந்திவா்மன் முத்து நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக நீா் தர கூட்டணியின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், பேராசிரியருமான நந்திவா்மன் முத்து நியமிக்கப்பட்டுள்ளாா்.
அந்தக் குழுவில் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளைச் சோ்ந்த 12 உறுப்பினா்களுடன் இவா் இடம்பெற்றுள்ளாா்.
பேராசிரியா் நந்திவா்மன் முத்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் என்பதுடன், பல்கலைக்கழகப் பசுமை வளாக ஒருங்கிணைப்பாளா், ஐக்கிய நாடுகள் சபையுடன் ஆலோசனை அந்தஸ்து கொண்ட வளாகங்கள் மற்றும் சமூகங்களில் நிலைதன்மையை மேம்படுத்துவதற்கான சங்கப் பிரதிநிதியாகவும் உள்ளாா்.
இவரது நியமனம் புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கும், புதுவை மாநிலத்துக்குமான பெருமை என பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) க.தரணிக்கரசு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.