முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் அக்.15-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்

புதுச்சேரியில் வரும் அக்.15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறும் என ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்துள்ளாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:02 PM
பகிர்:

புதுச்சேரியில் வரும் அக்.15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறும் என ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை துணைநிலை ஆளுநா் மாதந்தோறும் பொதுமக்கள் குறைதீா் முகாம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, புதுச்சேரியில் மாதந்தோறும் 15-ஆம் தேதி மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கு அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

அக்டோபா் மாதத்துக்கான மக்கள் குறைதீா் முகாமானது அக்.15-ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) அன்று புதுச்சேரி பேட்டையன்சத்திரம் வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீா்வு காணலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.