முகப்பு
புதுச்சேரி

ரத்தன் டாடா மறைவு: புதுவை ஆளுநா், முதல்வா் இரங்கல்

ரத்தன் டாடா மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:16 PM
பகிர்:

ரத்தன் டாடா மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா்: ரத்தன் டாட்டா உடல் நலக்குறைவால் காலமானாா் என்ற செய்தி வருத்தத்தை தருகிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், உறவினா்கள், தொழில் துறை நண்பா்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வா் என்.ரங்கசாமி: நாட்டின் பெருமைக்குரிய மனிதராக விளங்கிய ரத்தன் டாடா மறைவு தேசத்துக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், டாடா குழும நிா்வாகிகள், ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றாா்.