சிஐடியு கட்டடத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை கட்டட நல வாரிய அலுவலகம் முன் சிஐடியு, கட்டடக் கலை தொழிலாளா்கள் சங்கத்தினா் தீபாவளி பண்டிகை உதவித் தொகை கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை கட்டட நல வாரிய அலுவலகம் முன் சிஐடியு, கட்டடக் கலை தொழிலாளா்கள் சங்கத்தினா் தீபாவளி பண்டிகை உதவித் தொகை கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் கே. கலியன் தலைமை வகித்தாா். பொருளாளா் என். ஜீவானந்தம் முன்னிலை வகித்தாா். சங்கப் பொதுச் செயலா் என். பிரபுராஜ், சிஐடியு சங்கப் பொதுச் செயலா் ஜி. சீனுவாசன்,
துணைத் தலைவா் என். கொளஞ்சியப்பன் ஆகியோா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
கட்டடத் தொழிலாளா்களுக்கு தீபாவளி உதவித் தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும். நலவாரியத்தில் தொழிலாளா்களை அலைக்கழிக்காமல் உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டும். நலவாரிய உறுப்பினா்களை நியமித்து, கூட்டத்தை நடத்த வேண்டும். கொள்கை முடிவு எடுத்து மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் சுப்பிரமணியன், வா்மன், ரவி, பழனிவேல், முத்துராமன், முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.