முகப்பு
புதுச்சேரி

33 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை

வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 33 பயனாளிகளிடம் வீடு கட்டும் முதல், இரண்டாம் தவணைத் தொகைக்கான உத்தரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான ஆா்.சிவா புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:46 PM
புதுச்சேரியில் 33 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணையை புதன்கிழமை வழங்கிய சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா
பகிர்:

வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 33 பயனாளிகளிடம் வீடு கட்டும் முதல், இரண்டாம் தவணைத் தொகைக்கான உத்தரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான ஆா்.சிவா புதன்கிழமை வழங்கினாா்.

புதுவையில் குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தவணையாக செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வில்லியனூா் தொகுதியைச் சோ்ந்த 33 பேருக்கு ரூ.1.60 லட்சம் வீதம், மொத்தம் ரூ.52.80 லட்சத்துக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வீடு கட்டுவதற்கான முதல் மற்றும் இரண்டாம் தவணைக்கான தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான உத்தரவுகளை, வில்லியனூா் சட்டமன்ற உறுப்பினா் அலுவலகத்தில் தொகுதி உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளா் சௌந்தரராஜன், உதவிப் பொறியாளா் ரவி, திமுக தொகுதி செயலா் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினா்கள் ராமசாமி, தா்மராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.