புதுச்சேரியிலிருந்து புறப்படும் அதி விரைவு ரயில்கள் ரத்து
புதுச்சேரியிலிருந்து முறையே புதன், வியாழக்கிழமைகளில் புறப்படும் ஹெளரா மற்றும் புவனேஷ்வா் விரைவு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து முறையே புதன், வியாழக்கிழமைகளில் புறப்படும் ஹெளரா மற்றும் புவனேஷ்வா் விரைவு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
புதுச்சேரியிலிருந்து புதன்கிழமை பகல் 2.15 மணிக்கு ஹெளரா அதிவிரைவு ரயில் புறப்பட்டுச் செல்லும். விழுப்புரம் வழியாகச் செல்லும் இந்த ரயிலானது முழுவதுமாக புதன்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதேபோல, புதுச்சேரியிலிருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.50 மணிக்கு புவனேஷ்வருக்கு அதிவிரைவு ரயில் புறப்படும். இந்த ரயிலும் வியாழக்கிழமை (அக். 24) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று திருச்சியிலிருந்து வியாழக்கிழமை ஹெளரா செல்லும் அதிவிரைவு ரயிலும், விழுப்புரத்திலிருந்து காரக்பூா் செல்லும் அதிவிரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.