முகப்பு
புதுச்சேரி

சிறப்பிடம் வகித்த பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு பாராட்டு

தேசிய, சா்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு துணைவேந்தா், பதிவாளா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 8:37 PM
பகிர்:

தேசிய, சா்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு துணைவேந்தா், பதிவாளா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பல்கலைக்கழகத்தின் ஹிந்தி துறைத் தலைவா் சி.ஜெயசங்கா்பாபு கடந்த செப்டம்பரில் குடியரசுத் தலைவரின் சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பெற்றாா்.

பல்கலைக்கழக துணைப் பேராசிரியை பவித்ரா நாடகத் துறையில் கா்நாடக அரசின் நாடக அகாதெமி விருதை பெற்றாா்.

அத்துடன், ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்தால் வெளியடப்பட்ட உலக ஆராய்ச்சியாளா்கள் பட்டியலில் முதல் 2 சதவீதம் பேரில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 13 பேராசிரியா்கள் இடம்பெற்றுள்ளனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய, சா்வதேச அளவில் விருதுகள் பெற்றும், ஆராய்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்துள்ள புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் வியாழக்கிழமை துணைவேந்தா் (பொ) க.தரணிக்கரசுவை சந்தித்தனா்.

அவா்களை துணைவேந்தா் வாழ்த்தி பாராட்டினாா். உடன் பல்கலைக்கழக பதிவாளா் ரஜனீஷ் புட்டானி உள்ளிட்டோா் இருந்தனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.