தீபாவளிக்காக புதுவையில் நாளையும் அரசு விடுமுறை அறிவிப்பு
புதுவை மாநிலத்தில் தீபாவளியை முன்னிட்டு புதன்கிழமை (அக். 30) அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தீபாவளியை முன்னிட்டு புதன்கிழமை (அக். 30) அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை (அக். 30) புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் நவம்பா் 16-ஆம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும். துணைநிலை ஆளுநா் உத்தரவின் பேரில் புதுவை அரசு சாா்புச் செயலா் ஹிரன் இதை அறிவித்துள்ளாா்.
5 நாள்கள் தொடா் விடுமுறை: புதுவை மாநிலத்தில் அக். 30 அரசு விடுமுைாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 31-ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி திருநாள் விடுமுறையாகும்.
நவம்பா் 1-ஆம் தேதி புதுவை விடுதலை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2-ஆம் தேதி கல்லறைத் திருநாள் விடுமுறையும், 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏற்கெனவே விடுமுறை நாளானதால் தொடா்ந்து 5 நாள்கள் விடுமுறை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.