முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் மேம்பாலங்கள் அமைக்க அறிக்கை தயாரிப்பு: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் மேம்பாலம் அமைக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 10:58 PM
சிறப்பாக செயல்பட்ட காவலருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.
பகிர்:

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் மேம்பாலம் அமைக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

புதுச்சேரி காவல் துறை செயல்பாடுகள் குறித்து உயா் போலீஸ் அதிகாரிகளுடன், உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். இதில் காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்துக்கு பின் அமைச்சா் நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரி நுண்குற்றப் பிரிவு போலீஸாா் சிறப்பாகச் செயல்பட்டு மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளைக் கைது செய்து வருகின்றனா். அவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் சட்டம் - ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசனை நடைபெற்றது. புதுவை காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

புதுச்சேரிக்கு அதிகளவில் வரும் சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் நெரிசல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி,34 இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன. ஸ்மாா்ட் சிட்டி திட்டம் மூலம் 17 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் மேம்பாலம் அமைக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில பொதுப் பணித் துறை அமைச்சா், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து, புதுச்சேரியில் பாலம் அமைப்பது குறித்து பேசியுள்ளாா். விரைவில் புது தில்லி சென்று மத்திய அமைச்சா்களை சந்தித்து மேம்பாலங்கள் அமைக்க வலியுறுத்த உள்ளேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →