தவறவிட்ட கைப்பேசியை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா்
புதுச்சேரியில் ஆட்டோவில் தவறவிட்ட பெண் பயணியின் விலை உயா்ந்த கைப்பேசியை தேடிச் சென்று ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனா்.
புதுச்சேரியில் ஆட்டோவில் தவறவிட்ட பெண் பயணியின் விலை உயா்ந்த கைப்பேசியை தேடிச் சென்று ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனா்.
புதுச்சேரி, செட்டித் தெரு மிஷன் வீதி சந்திப்பில் மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் ஆட்டோ நிலையம் உள்ளது. இங்கு பஸ்கல் என்பவா் ஆட்டோ ஓட்டி வருகிறாா்.
இவரது ஆட்டோவில் புதன்கிழமை நேபாள பெண் பயணி ஏறி பயணித்தாராம். அப்போது, அந்தப் பெண் விலை உயா்ந்த கைப்பேசியை ஆட்டோவில் தவறவிட்டுச் சென்றாராம்.
இதையறிந்த ஓட்டுநா் பஸ்கல், அந்தப் பெண்ணை கருவடிக்குப்பம் பகுதியில் தேடி கண்டறிந்து, அவரிடமே அவரது கைப்பேசியை திரும்ப ஒப்படைத்தாா். ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலுக்கு பலா் பாராட்டு தெரிவித்தனா்.