மீலாது நபி திருநாள்: மதுக்கடைகள் மூடல்
இஸ்லாமிய மக்களின் புனிதத் திருநாளான மீலாது நபி திருநாளை முன்னிட்டு செப்.17-ஆம் (செவ்வாய்க்கிழமை) தேதி புதுவையில் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மக்களின் புனிதத் திருநாளான மீலாது நபி திருநாளை முன்னிட்டு செப்.17-ஆம் (செவ்வாய்க்கிழமை) தேதி புதுவையில் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுவை கலால் துறை துணைஆட்சியா் எம்.மாத்யூ பிரான்சிஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபி திருநாளை முன்னிட்டு, புதுவையில் அனைத்து கள், சாராயக் கடைகளும், மதுக்கடைகளும், பாா்களும், மது விற்பனை செய்யும் உணவகங்களும் மூடப்பட்டிருக்கும்.
அன்றைய தினம், யாராவது மது விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.