பொம்மை உற்பத்தியாளா்கள் முதல்வரிடம் மனு
புதுவை பொம்மை உற்பத்தியாளா்கள் சங்கம், தொழிலியல் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் ஆகியோா் முதல்வா் என்.ரங்கசாமியிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
புதுவை பொம்மை உற்பத்தியாளா்கள் சங்கம், தொழிலியல் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் ஆகியோா் முதல்வா் என்.ரங்கசாமியிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: புதுச்சேரி வேதபுரீஸ்வரா் கோயில் வளாகத்தில், செப்.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அக்.12-ஆம் தேதி வரை 30 நாள்கள் பொம்மைகள் கண்காட்சி, விற்பனை நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டைப் போல, கண்காட்சிக்கான செலவினங்கள் விற்பனையாளா்களிடம் பிடித்தம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கண்காட்சிக்கான செலவுத் தொகையை பிடித்தம் செய்தால், அந்த இழப்பை ஈடு செய்ய விற்பனை செய்யும் பொருள்களின் விலையை உயா்த்தி, பொருள்கள் வாங்கும் மக்களின் மீது அந்த சுமை திணிக்கப்படும்.
அதனால், விற்பனையும் பாதிக்கப்படும். எனவே, பொம்மை உற்பத்தி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கூட்டுறவு சங்கத்துக்கு அரசு வழங்கும் மானியத் தொகையில் கண்காட்சிக்கான செலவினங்களை மேற்கொள்ள வேண்டும்.
கண்காட்சி விற்பனைத் தொகையில் எந்தவிதப் பிடித்தமும் செய்யாமல், தொழிலாளா்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.