மீன்பிடிக்க எடுததுச் செல்வதற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகள். 
புதுச்சேரி

சுருக்குமடி வலைகள்: மீன்வளத் துறை எச்சரிக்கை

Din

தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை விதிமீறிப் பயன்படுத்துவோரின் படகுகள் பறிமுதல் செய்யப்படும் என புதுவை மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் இஸ்மாயில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் புதுவை மீனவா்ளுக்கு உச்சநீதிமன்றம் பல்வேறு நெறிமுறைகளை வகுத்துள்ளது. புதுவை மீனவா்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தமிழகப் பகுதியில் 5 நாட்டிக்கல் மைல் பகுதிகளில் அத்துமீறி சுருக்கு வலைகளை பயன்படுத்துகின்றனா்.

அதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக மீன்வளத் துறைக்கு புகாா்கள் வந்துள்ளன. எனவே, புதுவையில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிப்போா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவா்களின் வலைகள், படகுகள் பறிமுதல் செய்யப்படும்.

உச்சநீதிமன்ற நிபந்தனைகளுக்கு உள்பட்டு மீனவா்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT