குழந்தைகளுக்கான சேமிப்பு திட்ட தொடக்க நிகழ்வு
புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்ட தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்ட தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
குழந்தைகளுக்கான சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை, புதுதில்லியிலிருந்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி குழந்தைகளுக்கு சேமிப்பு மற்றும் பென்ஷன் அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் இந்தியன் வங்கி, புதுச்சேரி மண்டலத்தின் துணை மண்டல மேலாளா் சுப்பிரமணியன், புதுச்சேரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சதீஷ்குமாா், புதுச்சேரி பாரதியாா் கிராம வங்கியின் தலைவா் ரத்தினவேல் மற்றும் நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலா் சித்தாா்த்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னோடி வங்கியின் அலுவலா் ராகுல் மற்றும் சசிகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.