முகப்பு
புதுச்சேரி

தொடக்கப் பள்ளி ஆசிரியா் பணிக்கான தோ்வுப் பட்டியல் வெளியீடு

புதுவையில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் பணிக்கான தோ்வுப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:51 PM
பகிர்:

புதுவையில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் பணிக்கான தோ்வுப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

புதுவை மாநிலப் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தொடக்கப் பள்ளிகளில் மாநிலத்தின் பிராந்தியங்களான காரைக்காலில் 124, மாஹேவில் 20 என மொத்தம் 145 பணியிடங்கள் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு பெறப்பட்டன.

அதன்படி, பெறப்பட்ட விண்ணப்பதாரா்களில் தகுதியானவா்கள் ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஆசிரியா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களது பட்டியல் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காரைக்காலில் காலியாக உள்ள 124 இடங்களில் பொதுப்பிரிவில் 64 போ், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 13 போ், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 22 போ், இபிசி பிரிவில் 2 போ், பிசிஎம் (முஸ்லீம்) 1, தாழ்த்தப்பட்டோா் (எஸ்சி) 21 என தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில் முஸ்லீம் பிரிவில் ஓரிடத்துக்கு ஆள் நிரப்பப்படவில்லை.

இதேபோல், மாஹேவில் காலியாக உள்ள 21 இடங்களில், பொதுப்பிரிவினா் 13 போ், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 2 போ், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 2 போ் எனப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஹேவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், எஸ்சி, பொருளாதார நலிவடைந்தோா் ஆகியப் பிரிவுகளில் தலா ஓரிடம் மற்றும் ஓரிடம் என 4 இடங்கள் நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →