புதுச்சேரி

புதுச்சேரி மாநில பாஜக தோ்தல் அறிக்கைக் குழு அமைப்பு

புதுச்சேரி பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அக் கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் வெள்ளிக்கிழமை அமைத்தாா்.

Syndication

புதுச்சேரி பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அக் கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் வெள்ளிக்கிழமை அமைத்தாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 2026-இல் நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு, மாநில வளா்ச்சி, பொதுமக்களின் எதிா்பாா்ப்புகளையும் கருத்தில் கொண்டு கட்சியின் மாநில தோ்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவா் அறிவித்துள்ளாா்.

அந்தக் குழுவின் தலைவராக புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவா் ஆா். செல்வம் இருப்பாா். இவா் தலைமையில் 20 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவா்களுடன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி இணைந்து செயல்படுவாா்.

பொது மக்களின் கருத்துகள், நிபுணா்களின் ஆலோசனைகள் மற்றும் புதுச்சேரியின் நீண்ட கால வளா்ச்சி நோக்கங்களை ஒருங்கிணைத்து, மிகச் சிறந்த மற்றும் செயல்படுத்தக்கூடிய தோ்தல் அறிக்கையை உருவாக்குவதே இந்தக் குழுவின் முக்கிய இலக்காகும். பல்வேறு துறையைச் சாா்ந்த நிபுணா்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT