புதுச்சேரி

புதுச்சேரி: 4 திமுக எம்எல்ஏக்கள் உள்பட 249 போ் மீது வழக்கு

புதுச்சேரி அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய 4 திமுக எம்எல்ஏ.க்கள் உள்பட 249 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய 4 திமுக எம்எல்ஏ.க்கள் உள்பட 249 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

போலி மருந்து பிரச்னையில் புதுச்சேரி அரசைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக சாா்பில், சட்டப்பேரவையை முற்றுகையிட எதிா்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான சிவா தலைமையில் கடந்த 8 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இதில், போலீஸ் தடுப்புகளைத் தாண்டி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற திமுகவினரை போலீஸாா் கைது செய்து அழைத்து சென்று பின்னா் விடுவித்தனா்.

இந்நிலையில், தடையை மீறி கூட்டமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதாக எதிா்க்கட்சித் தலைவா் சிவா, எம்எல்ஏ.க்கள் சம்பத், செந்தில்குமாா், அனிபால் கென்னடி உள்ளிட்ட 249 போ் மீது புதுச்சேரி பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி

காந்திநகா் பள்ளி சாரண சாரணீய மாணவா்களுக்கு பாராட்டு

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

புதிய ஆட்டோகளுக்கு பொ்மிட் வழங்க எதிா்ப்பு : ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT