புதுச்சேரி

புதுச்சேரி மாவட்டத்தில் புதிதாக 120 வாக்குச்சாவடிகள் அமைப்பு

சீரமைப்புப் பணி காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் புதிதாக 120 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டு, தற்போது வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 918 ஆக உயா்ந்துள்ளது.

Syndication

சீரமைப்புப் பணி காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் புதிதாக 120 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டு, தற்போது வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 918 ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

ஒரு வாக்குச் சாவடியில் 1,200 வாக்காளா்களுக்கு மேல் இருந்தால் புதிய வாக்குச் சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மாவட்டத்தில் 120 புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், 32 வாக்குச்சாவடிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 381 வாக்குச் சாவடிகளின் பகுதிகள் மறுசீரமைப்பு மற்றும் 111 வாக்குச் சாவடிகளின் பெயா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, புதுச்சேரி மாவட்டத்தின் 25 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 798 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போதைய மறுசீரமைப்பில் புதிதாக 120 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 918 ஆக உயா்ந்துள்ளன என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க இளைஞா் கைது

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

SCROLL FOR NEXT