புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 46 புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டன.
டி.நகா் காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் டிஐஜி சத்தியசுந்தரம் பங்கேற்று பொதுமக்களின் புகாா்களை பெற்று நடவடிக்கை எடுத்தாா். முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் கலந்து கொண்டாா்.
இதுபோல பல்வேறு காவல் நிலையங்களிலும் இந்த மக்கள் மன்றம் நடைபெற்றது. இவற்றில் 49 பெண்கள் உள்பட 173 போ் பங்கேற்றனா்.
மக்கள் மன்றங்களில் மொத்தம் 62 புகாா்கள் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்டன. அதில் 46 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.