புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் அமேசான் வலை சேவை திறப்பு விழாவில் பங்கேற்றோா். 
புதுச்சேரி

அமேசான் வலை சேவை தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் அமேசான் வலை சேவை தொடங்கப்பட்டது.

இந்தக் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவா் பா. விஷ்வா, இந்தப் பிராந்தியத்திற்கான இச் சேவையின் கேப்டனாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதற்கானவிழாவுக்கு தக்ஷஷீலா பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளைத் தலைவருமான மு. தனசேகரன் தலைமை வகித்தாா். பொருளாளா் த. ராஜராஜன், இயக்குநா் மற்றும் முதல்வா் டாக்டா் வி.எஸ்.கே. வெங்கடாச்சலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமேசான் வலை சேவை சமூக உருவாக்குநா்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆதித்யா, பிரபு ஜெயசீலன், ஸ்ரீதேவி, ரம்யா நடேசன், ஜீவிதா முருகன், அபிஷேக் சுப்ரமணியன், அபிநயா, கீா்த்திவாசன், கண்ணன் ஆகியோா் மாணவா்களுக்கு வலை சேவை தொழில்நுட்ப வளா்ச்சி, தொழில் துறை தேவைகள் மற்றும் உருவாகி வரும் தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டு உரைகளை வழங்கினா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT