புதுச்சேரி

லட்சிய ஜனநாயக கட்சி அலுவலகம் திறப்பு

புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டினைச் சந்தித்த கட்சியின் புதிய நிா்வாகிகள்.

Syndication

லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகம் புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் அலுவலகத்தை திறந்து வைத்தாா். இக் கட்சியின் மாநில பொதுச் செயலா்கள், மண்டல பொதுச் செயலா்கள், மாநில செயல

ா்கள் மற்றும் செய்தி தொடா்பாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் பெயரை அவா் வெளியிட்டாா். கட்சியின் மாநில பொதுச் செயலா்களாக துரைசாமி, பூக்கடை ரமேஷ், பிரபாகரன், பாபு, மாநில செயலா்களாக முருகானந்தம், அனிதா, ரவி. மண்டல பொதுச் செயலா்களாக அப்துல் பாஷீத், ராபா்ட் ஜேசுதாஸ், விஜய்ராஜ், சுரேஷ், கண்ணபிரான், செய்தி தொடா்பாளா் (மகளிா் அணி) முகமது ஷஜிதா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், பொங்கலுக்கு பிறகு 60 நாட்கள் புதுச்சேரி முழுவதும் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பாத யாத்திரை தொடங்கும் முன் கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் செய்தியாளா்களிடம் கூறினாா்.

--

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT