புதுச்சேரி

74,000 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து: புதுச்சேரியில் நாளை விநியோகம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 74 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Syndication

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 74 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிறு வயது குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து பாதுகாக்க, மத்திய அரசு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்துகிறது. நிகழாண்டு டிச. 21-ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்த 74,698 குழந்தைகள் பயனடைவா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கிராமம் மற்றும் நகரப்புறங்களில் 425 முகாம்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான பேருந்து நிலையம்,

ரயில் நிலையம், பூங்காக்கள், கோயில்கள் மற்றும் வணிக வளாகங்களில் 31 இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், உடல் ஊனத்தை உண்டாக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சிறப்பு முகாம்களை அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT