புதுச்சேரி பொலிவுறு நகா் பேருந்து நிலையத்தில் ரூ.10-க்கு துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டு சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
நெகிழிப் பைக்கு மாற்றாக புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சாா்பில் இது அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 20 மதிப்பிலான துணிப் பையை ரூ. 10-க்கு குறைந்த விலையில் இந்த இயந்திரம் வழங்குகிறது.
இதை உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஜி. நேரு இயக்கி வைத்தாா். இந்நிகழ்வில் புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி, மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினா்- செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.