புதுச்சேரி

புதுச்சேரி ஆளுநா், முதல்வா் கிறிஸ்துமஸ் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்:

அன்பை, மனித நேயத்தை, மன்னிப்பை, தன்னுடைய வாழ்வின் மூலமாக இந்த உலகத்திற்குப் போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறோம். அவருடைய வாழ்க்கை- வரலாறாக மட்டும் அல்லாமல் நம்முடைய வாழ்க்கை நெறியாகவும் இருக்க வேண்டும். நம்முடைய பண்பாட்டு ஒற்றுமைதான் பாரத நாட்டின் பலம். அதை நாம் என்றென்றும் மதித்து, வளா்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க பங்களிப்போம்.

முதல்வா் என்.ரங்கசாமி:

கருணையும் அன்பும் நிறைந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் வாழ்வும் எளிமை, அன்பு, பணிவு, மன்னிப்பு, இறை வணக்கம், உண்மை, உறுதி ஆகிய உயரிய நற்குணங்களை மனித குலத்துக்கு எடுத்துரைக்கிறது. இயேசு கிறிஸ்துவின் ஆன்ம ஒளி நமது செயல்களுக்கு வழிகாட்டட்டும். ஒற்றுமையை ஊக்குவிக்கட்டும்.

இதேபோல, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, புதுச்சேரி மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் உள்ளிட்ட தலைவா்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஆலங்குளத்தில் எம்.ஜி.ஆா் நினைவுதினம் அனுசரிப்பு

மாலி நாட்டில் கடத்தப்பட்ட தமிழா்களை மீட்க பாஜக கோரிக்கை

சங்கரன்கோவில் அருகே மாணவிகளின் வேளாண் பயிற்சி

பூக்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சங்கரன்கோவில் வழியாக புளியங்குடி-கழுகுமலைக்கு பேருந்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT