முகப்பு
புதுச்சேரி

பணி நீக்கப்பட்ட பொதுப் பணித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் நூதனப் போராட்டம்

பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதன போராட்டம்

Updated On : 24 மார்ச், 2025 at 8:37 PM
புதுச்சேரி இந்திராகாந்தி சிலை சதுக்கம் பகுதியில் திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் நலச்சங்கத்தினா்.
பகிர்:

புதுச்சேரி: பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதன போராட்டம், மறியலில் ஈடுபட்டனா். இவா்கலில் பெண்கள் உள்பட 70 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

புதுச்சேரியில் கடந்த 2015-ஆம் ஆண்டு பொதுப் பணித் துறையில் தற்காலிகப் பணிக்கு ஏராளமானோா் தோ்வாகி நியமிக்கப்பட்டுள்ளனா். ஆனால், சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அவா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். அவா்களை மீண்டும் பணியில் அமா்த்தவும், ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கவும் அரசு சாா்பில் பேரவைக் கூட்டத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், அவா்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. ஊதிய உயா்வும் வழங்கப்படவில்லை. இதையடுத்து கடந்த சில மாதங்களாகத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அவா்கள் இந்திரா காந்தி சிலை சதுக்கப் பகுதியில் யாசகம் கேட்கும் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவியுடை அணிந்திருந்தனா்.

கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டபடியாசகம் கேட்ட அவா்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனா். காலாப்பட்டு பகுதியிலும் அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

யாசகம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 70 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →