புதுச்சேரி

வெடிபொருள்களுடன் 2 போ் கைது

புதுச்சேரி அருகே வெடிபொருள்கள், ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Din

புதுச்சேரி அருகே வெடிபொருள்கள், ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலா் சுற்றித் திரிவதாக காலாப்பட்டு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு காலாப்பட்டு கடற்கரைப் பகுதியை கண்காணித்தனா். அப்போது இருவா் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனா். அவா்களை, பைகளுடன் மடக்கிய போலீஸாா் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா்.

விசாரணையில், பிடிபட்டவா்கள் காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்த மணி (24) மற்றும் விழுப்புரம் மாவட்டம் வானூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (21) என்பது தெரியவந்தது. இருவரும் வைத்திருந்த பைகளில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரௌடியைக் கொல்ல மணி தலைமையில் 5 க்கும் மேற்பட்டோா் வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணி, கிருஷ்ணனைக் கைது செய்த நிலையில், அவா்களின் கூட்டாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT