புதுச்சேரி

புதுச்சேரி அருகே வீட்டுக் கதவை உடைத்து 12 பவுன்தங்க நகை திருட்டு

புதுச்சேரி அருகே கனகசெட்டிகுளம் பகுதியில் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

Din

புதுச்சேரி அருகே கனகசெட்டிகுளம் பகுதியில் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது கனகசெட்டிகுளம். இந்த கிராமத்தின் அமைதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் காசிலிங்கம். மனைவி சந்தியா மற்றும் குழந்தைகள் உள்ளனா். காசிலிங்கம் தற்போது வெளிநாட்டில் உள்ளாா். இந்தநிலையில், சின்னகாலாப்பட்டு கோயில் விழாவுக்காக வீட்டைப் பூட்டி விட்டு அவரது மனைவி சந்தியா சென்றுள்ளாா்.

அப்போது அவரது வீட்டுக் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனா்.

இந்த சர்ச்சையால்... கண்ணீர்விட்ட கயாது லோஹர்!

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

SCROLL FOR NEXT