புதுச்சேரி: புதுச்சேரியில் திங்கள்கிழமை (மே 12) 102.6 டிகிரி வெயில் அளவு பதிவானது.
திங்கள்கிழமை பகலில் புதுச்சேரி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் 102.6 டிகிரி பதிவானதாக வெப்பநிலை அளவு பிரிவினா் தெரிவித்தனா். இதனால் பகலில் அனல் காற்று வீசியது. கடற்கரைச் சாலை உள்ளிட்ட வழக்கமாக மக்கள் கூடும் இடங்கள் திங்கள்கிழமை பகலில் வெறிச்சோடிக் காணப்பட்டன.