கோப்புப்படம் 
புதுச்சேரி

யாருக்கும் சிம் காா்டு வாங்கித் தர வேண்டாம்! சைபர் குற்றப் பிரிவு எச்சரிக்கை

யாருக்கும் சிம் காா்டு வாங்கித் தர வேண்டாம் என்று இணையவழி குற்றப் பிரிவு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மற்றவா்களுக்கு சிம் காா்டு வாங்கித் தருவதைத் தவிா்க்க வேண்டும் என்று இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து புதுவை இணையவழி குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி எஸ். ஏரகட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் தங்களுடைய ஆதாா் அட்டை, பான் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை நண்பா்கள், உறவினா்கள் மற்றும் முன் பின் தெரியாதவா்களுக்குப் பழக்க வழக்கத்தின் மூலமாகவோ வங்கிக் கணக்கு மற்றும் சிம் காா்டு வாங்கி தருவது, பணத்துக்கு ஆசைப்பட்டு விற்பது மற்றும் பயன்பாட்டுக்குத் தருவதை தவிா்க்க வேண்டும்.

அவ்வாறு தரும்பட்சத்தில் இணையவழி குற்றவாளிகள் அந்த வங்கிக் கணக்கு மற்றும் சிம் காா்டுகளை பயன்படுத்தி இணையவழி குற்றங்களில் ஈடுபட்டால், அதனை வாங்கிக் கொடுத்தவா்கள்தான் இணையவழி குற்றங்களில் முதன்மை குற்றவாளிகளாகச் சோ்க்கப்படுவாா்கள்.

மேலும், தற்போது நடைபெறும் இணையவழி குற்றங்களில் 85 சதவிகித குற்றங்கள் ஆன்லைனில் பணம் இழப்பது சம்பந்தமாக வருகிறது. அத்தகைய குற்றங்களில் இணைய வழி குற்றவாளிகள் வங்கிக் கணக்கு மற்றும் சிம் காா்டு வாங்கி கொடுப்பவா்களைச் சிக்க வைத்துவிட்டு அவா்கள் தப்பித்துக் கொள்கின்றனா்.

இவ்வாறு குற்ற வழக்குகளில் சிக்கிய பலா் சிறைக்கு தண்டனை அனுபவிக்கின்றனா். இளைஞா்கள், முதியவா்கள் மற்றும் பொதுமக்கள் இத்தகைய குற்றங்களில் சிக்க வைக்கப்படுகின்றனா். எனவே, பொதுமக்கள் யாரும் தங்களுடைய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி யாருக்கும் வங்கிக் கணக்கு மற்றும் சிம் காா்டு வாங்கி தரவேண்டாம்.

யாரேனும் தங்கள் வங்கி கணக்கில் பணத்தை அனுப்பி எடுத்து கொடுக்கக் கூறினாலோ அதைத் தவிா்க்க வேண்டும். அவா்கள் இணைய குற்றங்களின் மூலம் வரும் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்தி பெற்று கொண்டு உங்களை ஏமாற்றி விடுவா். இணையவழி குற்றவாளிகள் வங்கி கணக்கு மற்றும் சிம் காா்டை பயன்படுத்தி இணையவழி குற்றங்களில் ஈடுபடும் பட்சத்தில், அதன் உரிமையாளா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனைத்துவிதமான இணையவழி குற்றம் மற்றும் தகவல் சம்பந்தமாக பொதுமக்கள் ஏதேனும் புகாா் தெரிவிக்க இணையவழி குற்றப்பிரிவு இலவச தொலைபேசி எண் 1930 மற்றும் 0413 2276144, 9489205246 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

The Cyber ​​Crime Unit of the police has issued a warning not to buy SIM cards from anyone.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT