புதுச்சேரியில் அதி கனமழை எச்சரிக்கை எதிரொலியால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.17) விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்காள விரிகுடா கடலில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், இன்றும் நாளையும் (திங்கள்கிழமை) கன மற்றும் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும், மணிக்கு 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை அடுத்து தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், இதனால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.17) விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அதிகனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படியும், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க ஆட்சியர் குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.